தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்க கூட்டம்

0 167
Stalin trichy visit

திருச்சி செப் 8  தமிழ்நாடு ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் கூட்டம், புத்தூர் டாக்டர் மதுரம் ஹாலில் மாவட்டத் தலைவர் அருள் ஜோஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் இணைச் செயலாளர் வில்லியம்ஸ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் அருள் ஜோஸ் தலைமையுரை ஆற்றினார்.
கூட்டத்தில் திருச்சி மேற்கு வட்டத் தலைவர் விக்டர், கிழக்கு வட்டப் பொருளாளர் முருகையன், மண்ணச்சநல்லூர் வட்டச் செயலாளர் கலியன், முசிறி வட்டச் செயலாளர் திருஞானம், தொட்டியம் வட்டப் பொருளாளர் நடராஜன் ஆகியோர் வட்டக்கிளை செயல்பாடுகள் குறித்துப் பேசினர். மாவட்டத் துணைத் தலைவர் மணி சங்க வளர்ச்சி குறித்துப் பேசினார். மாநிலத் துணைத் தலைவர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் மாநிலச் செயலாளர் பாலகிருஷணன் ஆகியோர், ஓய்வூதியர்கள் எதிர்கொள்ள இருக்கும் பாதிப்புகள் குறித்தும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஓய்வூதியர்கள் படும் துன்பங்கள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினர்.
சென்ற மாத சங்க வரவு செலவு கணக்குகளை மாவட்டப் பொருளாளர் கலைமணி படித்து ஒப்புதல் பெற்றார். மாவட்டத் துணைத் தலைவர் ஜெகநாதன் தீர்மானங்களை முன்மொழிந்து ஒப்புதல் பெற்றார்.
கூட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கேட்டு கருவூலத்தில் விண்ணப்பம் செய்யும்போது காலதாமதமாகுவதை சரி செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற ஆணைப்படி ஓய்வூதியர்களுக்கு அதிகமாக வழங்கப்பட்ட தொகையை பிடித்தம் செய்யக்கூடாது என்று கருவூலக் கணக்குத் துறை மண்டல இணை இயக்குநரை கேட்டுக் கொள்வது. அனைத்துத் துறைகளிலும் நிலுவையில் உள்ள ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கொடுக்க மாவட்ட கலெக்டரை கேட்டுக் கொள்வது. கடந்த தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியத்திற்குப் பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் மாவட்ட இணைச் செயலாளர் வில்லியம்ஸ் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.