சேரன் செங்குட்டுவன் நாடகம் திருச்சியில் அரங்கேற்றம்

0 352
Stalin trichy visit

கலைஞர் எழுதிய சேரன் செங்குட்டுவன் நாடகம் மீண்டும் திருச்சியில் அரங்கேற்றம்

திருச்சி, நவ.2  முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட மாநகர கழகங்களின் சார்பாக திருச்சி தேவர் ஹாலில் சேரன் செங்குட்டுவன் நாடகம் அரங்கேற்றப்பட்டது
இந்நிகழ்விற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் மூக்கன் லீலாவேலு வரவேற்புரையாற்றினார். திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,  பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தலைமை வகித்தார். மாநகரக் கழக செயலாளர் மதிவாணன் முன்னிலை வகித்தார்.  சிறப்பு அழைப்பாளராக கழக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை கலந்து கொண்டு சிறப்பித்தார் இறுதியாக நன்றியுரை மாநகரத் துணைச் செயலாளர்கள் பொன்செல்லையா சரோஜினி ஆகியோர் நிகழ்த்தினார்
பண்ணை சிங்காரவேலன் நாடக குழுவினரின் இடம்பெற்ற கலைஞர்களுக்கு பரிசு மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பரிசு பொருட்களும் நிகழ்வில் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் மாவட்ட மாநகர  நிர்வாகிகள் செங்குட்டுவன், குணசேகரன், சந்திரமோகன் நூர்கான், பகுதி கழகச் செயலாளர் மோகன் பாபு மணிவேல்
ராஜ்முகமது மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் என  திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave A Reply

Your email address will not be published.