பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

0 340
Stalin trichy visit

திருச்சி, நவ. 2 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வி.ஏ சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கங்காணிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமலிங்கம் (55) இவர் தனது நண்பர் குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஏரகுடி கிராமத்திற்க்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார் இருசக்கர வாகனத்தை நண்பர் குமார் ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது உப்பிலியபுரத்திலிருந்து தா.பேட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது

முன்னால் சென்ற பேருந்தை குமார் கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் பேருந்தில் மோதியது. ராமலிங்கம் மற்றும் குமார் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் பின்னால் அமர்ந்திருந்த ராமலிங்கத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த குமார் துறையூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து உப்பிலியபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ராமலிங்கம் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.