முதலமைச்சர் வருகை  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளியில் ஆய்வு

0 235
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.28-ம்தேதி வருகைதரவுள்ளதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.28-ம் தேதி திருச்சி வருகிறார். அன்றைய தினம் காலை திருச்சி காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் வருகை தரும் தமிழக முதல்வர் அவர்கள் ‘Stem On Wheels’ திட்டத்தினை தொடங்கி வைக்கவுள்ளார். அறிவியல் சம்பந்தமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வையும் அறிவியல் சார்ந்த அறிவையும் கற்பிக்கும் வகையில் நூறு இரு சக்கர வாகனங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு கல்வி கற்பிக்கும் புதிய திட்டத்தை மாண்புமிகு முதல்வர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைக்க இருக்கிறார்கள்
இதனை முன்னிட்டு மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி
நிகழ்வு நடைபெறும் பாப்பாகுறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் கோட்டத் தலைவர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.கே.என்.சேகரன் ஆகியோரும் கல்வித்துறை உயர் அலுவலர்களும். ஆசிரியர்களும் கலந்துகொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.