முதலமைச்சரின் காலை உணவு திட்டம் : அமைச்சர் உதயநிதிஸ்டாலின் ஆய்வு
திருச்சி, ஆக.1 இரண்டு அரசுமுறை பயணமாக திருச்சி வந்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் நேற்று பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து இன்று (01.08.2024) திருச்சிமாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், அல்லூர் ஊராட்சி பாரதி துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார்.
உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உள்பட பலர் உள்ளனர்.