குழந்தை உரிமை பாதுகாப்பு உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி, ஆக.7 குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பழைய மாவட்ட ஆட்சியரக சாலை போக்குவரத்து பூங்காவில் 07.08.23 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகள் மீதான வன்முறைகளான குழந்தை தொழிலாளர் குழந்தை திருமணம் குழந்தைகளுக்கான பாலியல் தொல்லை குழந்தை கடத்தல் பெண் சிசுக்கொலை சட்ட விரோதமாக குழந்தை விற்றல் முதலிய செயல்கள் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் குழந்தை திருமண தடுப்பு சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்தும் மாநகர காவல் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜீம் இணையவழி குற்றங்கள் சாலை போக்குவரத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு பணியாளர் கீதா குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குழந்தை பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.