அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 356
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி பூவலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை பாதுகாப்பு மற்றும் மனநல ஆலோசனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் பொசலி தலைமையில் 28.02.23 நடைபெற்றது,

மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் ஸ்ரீவித்யா ஆற்றுப்படுத்துனர் பரமேஸ்வரி லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசைவாணி ஆகியோர் குழந்தைகள் பள்ளி பருவத்தில் கல்வி கற்பது அவசியம், கல்வியின் முக்கியத்துவம், குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் மாணவர்களின் பங்கு பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடந்தையாக செயல்படுவது அல்லது மூடி மறைப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறித்தும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.