சிறப்பு மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருச்சி, பிப். 28 திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், தாயனூர் கிராமம், புங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அரசுத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு 378 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) வேலுமணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வம், வட்டாட்சியர் குணசேகரன், மணிகண்டம் ஒன்றிய குழுத் தலைவர் கமலம் கருப்பையா, புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.