திருச்சி அருகே பயங்கரம்: இளைஞர்கள் அடுத்தடுத்து படுகொலை-2வது உடல் மீட்பு

0 465
Stalin trichy visit

திருச்சி அருகே பயங்கரம்: இளைஞர்கள் அடுத்தடுத்து படுகொலை-2வது உடல் மீட்பு
துறையூர் அருகே முகம் சிதைக்கப்பட்டு, கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்கிருந்து 5வது கிலோமீட்டரில் மற்றொரு இளைஞர் படுகொலை செய்து ஆற்றுப் பாலத்தில் வீசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் துறையூர் கொத்தம்பட்டி குண்டாற்று பாலம் அருகே உடல் சிதைந்த நிலையில் ஒரு ஆண் சடலம் இன்று காலை கிடப்பதாக அப்பகுதியினர் துறையூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த நபருக்கு 40 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது. முகம் முழுவதும் சிதைந்த நிலையில் உயிரிழந்த நபரின் உடலை குற்றவாளிகள் பாலத்தின் மேற்புறம் இருந்து தூக்கி வீசி சென்றிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்தவர் யார் என்பது குறித்த விபரம் உடனடியாக தெரியவில்லை இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்த உடல் மீட்கப்பட்டதிலிருந்து 5வது கிலோமீட்டரில் உள்ள பொன்னுசங்கம்பட்டி ஆற்றுப்பாலத்திற்கு அடியில் மற்றொரு இளைஞர் இதேபோல் படுகொலை செய்யப்பட்டிருப்பது காவல்துறையினருக்கு இன்று மாலை தெரியவந்தது.
இதை தொடர்ந்து ஜம்புநாதபுரம் போலீசார் விரைந்து சென்று அந்த உடலையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த இருவரும் உடல் ஒற்றுமையில் ஒரே மாதிரி இருப்பதாகவும், வேறு எங்கோ கொலை செய்து இங்கு கொண்டு வந்து உடல்களை வீசி சென்று இருக்கலாம் என்றும், இந்த இரு கொலைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர், எஸ்.பி.,சுஜித் குமார், முசிறி டிஎஸ்பி யாஸ்மின் ஆகியோர் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
திருச்சி அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.