துபாயில் இருந்து திருச்சி வந்த சிவில் என்ஜினியர் திடீர் மாயம்

0 13
Stalin trichy visit

திருச்சி ஆக24 – திருச்சி திருவானைக்காவல் ராகவேந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் இமயன் (வயது 35) இவர் துபாயில் சிவில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இமயன் அங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து அதில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து இமயன் இந்தியா திரும்பினார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த இறங்கி இமயன் பிறகு தனது நண்பர் வெங்கட் என்பருடன் வடபழனிக்கு சென்றார்.

அதன் பிறகு அவர் திருச்சிக்கு வரவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து இமயனின மனைவி சந்தியா திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து துபாயில் இருந்து சென்னை வந்த இமயன் எங்கு சென்ற அவரை யாராவது கடத்தி சென்றார்களா ? அல்லது மாயமாகிவிட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.