தொட்டியத்தில் நாளை மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
திருச்சி, டிச. 18 திருச்சி மாவட்டம், தொட்டியம் பேரூராட்சி அலுவலகத்தில் உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு தலைமை வகித்தார். செயல் அலுவலர் பிரகந்தநாயகி சிறப்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து தொட்டியம் பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான முகாம்கள் நடத்தப்படுவதற்கான நோக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இம்முகாம்களில் புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், கூடுதல் மின்சுமை கட்டணங்கள், கட்டுமான வரைபட ஒப்புதல், சொத்து வரி, குடிநீர், பிறப்பு, இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, காலி மனை வரிவிதிப்பு, சாலையோர வியாபாரிகள், அடையாள அட்டை, பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, இணையவழி பட்டா, நில அளவீடு, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், மற்றும் இதர சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தல் மற்றும் காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள், வாழ்வாதார கடன் உதவிகள் சார்ந்த கோரிக்கை மனுக்களை முகாமில் அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. மேற்படி மக்களுடன் முதல்வர் முகாம் தொட்டியத்தில் நாளை டிச.19 காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளதால் பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு செயல் அலுவலர் பிரகதநாயகி கேட்டுக் கொண்டுள்ளார். கூட்டத்தில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், தலைமை எழுத்தர் கண்ணன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.