மேட்டுப் பாளையத்தில் அன்னகாமாட்சி அம்மன் வீதி உலா

0 226
Stalin trichy visit

 

திருச்சி, டிச. 18  திருச்சி மாவட்டம்,  தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. அண்மையில் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த நிலையில் அன்ன காமாட்சி அம்மன் உற்சவர் சிலை புதிதாக பக்தர்களால் சுவாமி மலையில் செய்யப்பட்டு எடுத்து வரப்பட்டது. இந்நிலையில் நேற்று உற்சவர் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அன்ன காமாட்சி அம்மன் உற்சவர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஏற்றப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். அப்போது பக்தர்கள் தேங்காய் பழம் படைத்து அன்ன காமாட்சி அம்மனை வழிபட்டனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அருட்பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.