கல்லூரி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

0 252
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 21  திருச்சி கொட்டப்பட்டு ஐஸ்வர்யா எஸ்டேட் விஸ்தரிப்பைச் சேர்ந்தவர் தனகோபாலன் (வயது 39). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பொன்மாரி (40). இவர் திருச்சி மத்திய சிறையில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தனகோபாலன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்மலை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.