கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
திருச்சி, ஜூன்21 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் நீரில் மிதந்தபடி அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கவிதாவிற்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு இது குறித்து அவர் மணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மணச்சநல்லூர் போலீசார் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எப்படி இறந்தார் என்பது குறித்து மணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.