லஞ்சம் வாங்கிய வணிக மின் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
திருச்சி, ஜூலை 11 புதிய மின் இணைப்பு வழங்க பரிந்துரை செய்ய லஞ்சம் வாங்கி வழக்கில் வணிக மின் ஆய்வாளர் சிவக்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திரு.சவரிமுத்து, த/பெ சவரிமுத்து தண்ணீர்பந்தல், சமயபுரம் என்பவரின் மனைவி திருமதி.ரத்தினமேரி என்பவரின் பெயரில் உள்ள வீட்டிற்கு
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் தாலுகா, சமயபுரம், தண்ணீர்பந்தலை சேர்ந்த சவரிமுத்து தனது மனைவி ரத்தினமேரி பெயரில் புதிதாக மின் இணைப்பு வழங்க கோரி சமயபுரம், இளமின் பொறியாளர் அலுவலகத்தில் வணி மின் ஆய்வாளர் சிவக்குமாரிடம் விண்ணப்பித்துள்ளார். மின் இணைப்பு வழங்க வணிக மின் ஆய்வாளர் சிவக்குமார், சவரிமுத்துவிடம் ரூ.900 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சவரிமுத்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிவுரைப்படி கடந்த 06.06.2008ந்தேதி சவரிமுத்துவிடம் வணிக மின் ஆய்வாளர் சிவக்குமார் கையூட்டாக ரூ.900/-ஐ கேட்டு பெற்ற போது அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் சூரக்குமாரால் கைது செய்யப்பட்டார். மேற்படி, வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று இன்று (11.07.2023) திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் வணிக மின் ஆய்வாளர் சிவக்குமார் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 7-க்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ.10,000/- அபராதமும், ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 13(2)/ 13(1)()க்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ.10,000/- அபராதமும், மேற்படி அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
மேற்படி வழக்கினைமணிகண்டன், காவல் துணைக் கண்காணிப்பாளர், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, பிரசன்ன வெங்கடேஷ், காவல் ஆய்வாளர், மற்றும் பாஸ்கர், உதவி ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, திருச்சிராப்பள்ளி ஆகியோர்கள் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்தும் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞராக சுரேஷ்குமார் அவர்கள் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.