அனைத்து வார்டுகளிலும் மினிகிளினிக் உருவாக்கிட கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

0 417
Stalin trichy visit

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் பகுதி குழு மூன்றாவது மாநாடு அரியமங்கலம் ஜூப்லி மஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோட்டை உடனே அமைத்திட வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து சாலைகள் அமைக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் மினிகிளினிக் உருவாக்கிட வேண்டும். திருவெறும்பூரில் நீதிமன்றம் மற்றும் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக மறைந்த தோழர்கள் சுலைமான் அவர்களின் நினைவாக ஜோதியும்,
மறைந்த தோழர்கள் கதிரேசன் பெரியசாமி நினைவாக செங்கொடியும், மறைந்து துளசியை நினைவாக கொடிக்கம்பமும் கொண்டுவரப்பட்டது. மாநாட்டினை மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் P.செல்வசிங் துவக்கி வைத்தார். மாநில குழு உறுப்பினர் தோழர் S.ஸ்ரீதர் நிறைவுரை ஆற்றினார். இறுதியாக காட்டூர் பகுதிக்குழுவிற்க்கு 12 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய காட்டூர் பகுதி செயலாளராக
தோழர் G.கனல்கண்ணன் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.