தார் சாலை அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மணப்பாறை நகராட்சி 19, 20 வது. வார்டில் உள்ள காந்திநகர், கிழக்குபகுதியில் இருந்து மணப்பாறைப்பட்டி பாரதிதாசன் தெரு மண்சாலையை இணைப்பு தார் சாலையாக அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜனசக்தி உசேன் தலைமை வகித்தார். சௌக்கத்அலி, மனோன்மணி, ரகமத்துனிஷா, நல்லுச்சாமி, மரியராஜ், சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில் துணை செயலாளர் இந்திரஜித், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், துணைச் செயலாளர்கள் பழனிச்சாமி, தங்கமணி, சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர் தங்கராசு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். ஒன்றியகுழு ராஜேந்திரன், பெருமாள், குருசாமி, பிரேமாவதி, நகரகுழு துரைச்சாமி, ராஜா, தங்கராஜ், பிரகாஷ், ஜெயலெட்சுமி, லாரன்ஸ், மைக்கேல் உட்பட சி.பி.ஐ.நகர ஒன்றிய நிர்வாகிகளும் அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.