திருவெறும்பூர் அருகே சமுதாய வளைகாப்பு விழா

0 90
Stalin trichy visit

சமுதாய வளைகாப்பு விழா திருவெறும்பூர் அருகே உள்ள எழில் நகர் ஓய்வு பெற்ற பெல் ஊழியர்கள் சமுதாய கூடத்தில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி தலைமை வகித்தார்.

முன்னதாக திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் நித்தியா வரவேற்றார்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மனைவி ஜனனி மற்றும் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 120 பெண்களுக்கு நடந்த சமூக வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி இந்த சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுகிறது திருமணம் ஆன நாளிலிருந்து ஒரு பெண் கருவுற்ற நாட்களில் அந்த பெண் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பது குடும்பத்தினர் மட்டுமல்ல உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசும் அதைச் செய்ய இருக்கிறது.

தாய்ப்பால் என்பது குழந்தைக்கு முக்கியமாகும் ஒரு குழந்தை கரு உருவாக கும் நாளில் இருந்து ஆயிரம் நாட்கள் பொன்னான நாட்களாகும் குழந்தைகளின் வளர்ச்சி அவசியமாகும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் ஒவ்வொரு மாதமும் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் குழந்தைகளின் வளர்ச்சி ஒவ்வொரு விதமாக இருக்கும் அதற்கு மருந்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள் இந்த சமுதாயத்தின் மருத்துவராக தமிழக முதல்வர் உங்களுக்கு இதுபோன்ற விழாவை நடத்துகிறார்.

கருவுற்ற பெண்கள் மனதால் கொஞ்சம் உடல் அளவிலும் நலமாக இருக்க வேண்டும் அப்பொழுது அவர்களது குழந்தைகளும் சாத்தானதாகவும் ஆரோக்கியமானதாக இருந்தால் தான் மகிழ்ச்சியாக இருக்கும் சத்தான குழந்தையாக வளர்த்தால் தான் அவர்கள் அறிவாளியாகவும் நல்ல உடல் நலத்துடனும் இருப்பார்கள் அதனால்பெண்கள் வருமுன் காப்போம் சத்தான குழந்தைகளை இந்த சமுதாயத்திற்கு வழங்குவதற்கு சத்தானதை சாப்பிட வேண்டும் நீங்கள் நல்ல குழந்தைகளையும் சத்தான குழந்தைகளை பெற்று தாருங்கள் உங்களது குழந்தைகள் நீங்கள் பள்ளிக்கு அனுப்பிவையுங்கள் நான் பார்த்து கொள்கிறேன் அதன் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் நான் துணையாக இருப்பேன் இந்த அரசு உங்களுக்கு ஒவ்வொரு உறுதுணையாக இருக்கும் நீங்களும் அரசுக்கு முத்துவேல் கருணாநிதிக்கும் திராவிடம் மாடல் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
இந்த சமூதாய வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டு வருங்கால சந்ததியினரை உருவாக்கும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் இந்த கர்ப்ப காலத்தில் தாய் வீட்டு சீராக மங்கல பொருட்களான வளையல், மங்கல நாண், மஞ்சள், குங்குமம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம் வேப்பம் காப்பு, மாலை மற்றும் துண்டு பிரசுரம், ஆரஞ்சு பழம், அதிரசம் முறுக்குஆகிய அடங்கிய தாம்பூலம் வழங்கப்பட்டு 5 வகையான கலவை சாதமும் பரிமாறப்படும்.

இந்த விழாவில் 120 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் மேலும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி கூத்தைப்பார் பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருவெறும்பூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கார்த்திகா நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.