ரூ.1.80 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனை : அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்
திருச்சியில் ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்ட புதிய அரசு பொது மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருவரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி மண்டலம் 3க்கு உட்பட்ட வார்டு 37 ,38 ,39 ,42. 43, ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
காட்டூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தரம் உயர்த்தப்பட்ட அரசு பொது சுகாதார மருத்துவமனை வேண்டுமென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்
மேலும் இதனையடுத்து தேசிய நகர்ப்புற சுகாதார திட்டம் ( 2023- 24) ஆம் ஆண்டு நிதியாண்டின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன பொது மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் மேலும் இதே போல் அரியமங்கலம் மாநகராட்சிக்கு உட்பட்ட உள் அரியமங்கலத்தில் 30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் மற்றும் திருவரம்பூர் மாநகராட்சிக்குட்பட்ட
வ உ சி நகர் பகுதியில் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையம் மற்றும் இதேபோல் பொன்மலை பட்டி மாநகராட்சிக்குட்பட்ட ஜே ஜே நகரில் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையம் என 2 கோடியை 80 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற அரசு மருத்துவமனை மற்றும் துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்து சிகிச்சைக்காக வந்த மக்களிடம் கோரிக்கைகளை கேட்டதுடன் மருத்துவமனையில் பராமரிப்பு பணிகளையும் பற்றியும் கேட்டறிந்தார் மேலும் இந்நிகழ்வில் மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன், மண்டல 3ன் துணை ஆணையர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன் ராம் மாவட்ட நல அலுவலர் ஹேம்சந்த் காந்தி, மாநகர நல மருத்துவ அலுவலர் சுபாஷ் காந்தி, காட்டூர் மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், மற்றும் காட்டூர் பகுதி செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ் சிவக்குமார் 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில், 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே. கே.கே கார்த்திக், உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்