மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டதை கண்டித்து : திருச்சியில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி ஆக 14 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார் கேவை அவமதித்ததை கண்டித்து திருச்சி நீதிமன்றம் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட வழக்கறிஞரணி தலைவர் வழக்கறிஞர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் எம்.லட்சுமணன், ராஜேந்திரன் முருகையா விஜயா பாபு அல்லூர் பிரபு அஸ்வின் குமார், மாநில வழக்கறிஞர் அணி பொதுச் செயலாளர் கிருபா கரன்,மோகனாம்பாள் பிரேம், கோகுல், சுகன்யா ஐஸ்வர்யா சுப்பிரமணி சரவணன்,ரத்தின நாச்சியார்,திருச்சி மாவட்ட காமராஜர் பேரவை தலைவர்,மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம்,
மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி கே சுப்பையா , காங்கிரஸ் நிர்வாகிகள் சம்சுதீன்,மகளிர் அணி ஜெகதீஸ்வரி,சேவாதளம் அப்துல் குத்தூஸ்,ராமநாதன், மலைக்கோட்டை சேகர், முன்னாள் கோட்டத் தலைவர் ஓவியர் கஸ்பர், ஏபி ராஜவேல் தனசேகர் திருச்சி மகாராஜா மாணிக்கவேல் மார்க்கெட் மாரியப்பன் மகளிர் அணி ஜோதி சண்முகம், நிர்மல் குமார் கிருஷ்ணமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.