நாட்டின் 80 வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி
திருச்சி ஆக 14-நாட்டின் 80 வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி மாவட்ட தலைவர் கே. ஒண்டி முத்து தலைமையில் திருச்சி தெப்பக்குளம் அருகில் இருந்து பேரணி புறப்பட்டது. பேரணியை மாநில இணைப் பொருளாளர் டாக்டர் சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பேரணியில் மாவட்ட பொதுச் செயலாளர் காளீஸ்வரன்,மாநிலத் துணைத் தலைவர் புவனேஸ்வரி, மாவட்டத் துணைத் தலைவர் ரவிக்குமார், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் , எஸ்பி சரவணன்,அரசு நலத்திட்ட பிரிவு மாநில நிர்வாகி எம்பி. முரளிதரன், எஸ்டி பிரிவு மணிவேல்,வர்த்தகத் துறை பிஆர். பாண்டியன், திருச்சி மகளிர் அணி மாவட்ட செயலாளர் மலர்கொடி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் வரகனேரி பார்த்திபன், திருமலை, ராஜேஷ் குமார்,மாநில அரசு தொடர்பு பட்டியல் அணி இணை அமைப்பாளர் இந்திரன்,மாவட்ட நிர்வாகிகள் பாலன், இல.கண்ணன் ஜி டி தினகர் விவேகானந்தன், மகேஸ்வரி ராஜேந்திரன், மோகன்,தர்மராஜ், அனிதா, ஊடகப் பிரிவு பாலச்சந்திரன், பிரபாகரன், துணைத் தலைவர் விஜயகுமார், கோபாலகிருஷ்ணன், சண்முகம், சமூக ஊடகப்பிரிவு ராஜேஷ் குமார், இளைஞரணி சேதுபதி, கேப்டன் நடராஜன்,ஊடகப்பிரிவு முரளி, திருவேங்கடம் மருதை, இளைஞரணிசந்தோஷ் குமார், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ராஜா, ஐடி விங் உப்பிலி சீனிவாசன், சதேஷ்,மண்டல தலைவர் பழனிவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்