மணப்பாறையில் காங்கிரஸ் கட்சியின் 141 ம் ஆண்டு துவக்கவிழாகொண்டாட்டம்

0 129
Stalin trichy visit

திருச்சி, டிச.29  மணப்பாறையில் காங்கிரஸ் கட்சியின் 141 ம் ஆண்டு துவக்கவிழாவை கேக் வெட்டி கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்.

திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் மருங்காபுரி மற்றும் வையம்பட்டி வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் 141 வது துவக்க விழா கொண்டாடப்பட்டது. வட்டார தலைவர்கள் கே.கே.பி.செல்வம், ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் .‌மாநிலச் செயலாளர் ஜே. ரமேஷ்குமார் கேக் வெட்டி கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் கேக் ஊட்டி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். பின்னர் பொதுமக்கள், கடை வியாபாரிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் கேக் மற்றும் இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சியில், மணப்பாறை தெற்கு வட்டார தலைவர் சத்தியசீலன் வடக்கு வட்டார தலைவர் சிவசண்முகம், தெற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, தெற்கு மாவட்ட துணை தலைவர் மிலிட்டரி முருகன், மணப்பாறை வட்டார துணை தலைவர் பாண்டி முருகன், சிவல்பான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் மாங்காபுரி பொன்னுச்சாமி, வட்டார சிறுபான்மை பிரிவு தவைவர் வேளாங்கண்ணி, கலைப்பிரிவு மாவட்ட தலைவர்கள் பிரகாஷ் ராஜ், ஊத்துப்பட்டி சரவணன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் கோபி என்ற பழனியாண்டி இளைஞர் காங்கிரஸ் கணேசன் பொரிபாலு, உப்பு சத்தியாகிரக தலைவர் பழனிச்சாமி, மணப்பாறை பொன்னுச்சாமி, மகளிர் அணி மல்லிகா, ராஜலட்சுமி, அமராவதி, மூக்காயி, லட்சுமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.