கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் – திருச்சி சிவா எம்.பி.

0 359
Stalin trichy visit

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி,2024 பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் – திருச்சி சிவா எம்.பி. பேட்டி

 

கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்துவிட்டது. தற்போதைய தேர்தல் ஆணைய முடிவுகளின் படி காங்கிரஸ் 81 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 113 இடங்கள். பாஜக 46 இடங்களிலும் மஜத 18 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகி இருந்தன.

மைசூர், மாண்டியா, சாம்ராஜ்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள தொகுதிகள் பழைய மைசூர் பிராந்தியமாக கருதப்படுகிறது. இங்கு குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிதான் பொதுவாக அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கும்.
இந்த முறை காங்கிரஸ் பெரிய அளவில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 34 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 13 இடங்களிலும், பா.ஜ.க. 8 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. தபால் வாக்குகள் சுற்று முடிந்து, வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால் முடிவுகள் இன்னும் மாற வாய்ப்பு உள்ளது.

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வெற்றி முகம் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாஎம்.பி. ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்… அதில் கூறுகையில்… கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் பெரும்பான்மை பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது ‌..

இந்த தேர்தல் வெற்றி என்பது முன்கூட்டியே எதிர்ப்பார்த்த ஒன்று தான்.. பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்த கர்நாடகா மாநிலத்தில் மக்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியுடன் இல்லை ..

என்பதை கடந்த கால நிகழ்வுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் தீவிர பிரச்சாரங்களும் தொண்டர்களின் உழைப்பையும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம் என்பதை நிச்சயமாக அடித்தளத்தில் வைத்து கொள்ள வேண்டும் …

பாரதீய ஜனதா கட்சி வாக்குறுதி கொடுத்தாலும் எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்பதில் ஒன்றியத்தில் நடைபெறும் ஆட்சியின் மூலமாகவும் வேறு மாநிலத்திலும் மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்..

எனவே இந்த தேர்தலில் மக்களுடைய தீர்ப்பு என்பது இந்திய நாட்டின் ஜனநாயகம் உயிர் துடிப்புடன் இருக்கிறது என்ற நல்ல உண்மையை நிலை நிறுத்துகிறது.வருகிள 2024 ஆம் ஆண்டு நடைபெறுகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு இது முன்னோட்டமாக எடுத்து கொள்ளலாம்… பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலங்களாக இருந்தாலும் ஒன்றியமாக இருந்தாலும் நம்முடைய ஜனநாயகத்திற்கு கேள்விக்குறி ஆக்குகின்றன…எதிர் கட்சிகளை ஒடுக்குகின்ற செயல்கள் நம்முடைய ஒருமைப்பாடுக்கு மதச்சார்பின்மைக்கும் பலவிதமான அச்சத்தை உருவாக்குகின்ற நடவடிக்கைகள் மக்களுக்கு திருப்திகரமாக இல்லை..

ஆக இந்த தேர்தல் வெற்றி என்பது காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்பது இல்லாமல் இந்தி ஜனநாயகத்தின் வெற்றி …

எதிர்காலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் என்ற வகையில் மிகுந்த மகிழ்ச்சி உரியதாக இருக்கிறது.. இதே நிலை அடுத்த ஆண்டு நிச்சயமாக எல்லா இடங்களிலும் தொடரும் என்ற நம்பிக்கையோடு நம்முடைய அரசியல் பயணத்தை தொடரலாம் என தெரிவித்தார்

 

Leave A Reply

Your email address will not be published.