மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளி கட்டுமான பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி, மே 25 திருச்சி மாநகராட்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் கல்வி நிதியின் கீழ் ரூ.9.90 கோடி மதிப்பீடில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளி கட்டிட கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பூமிபூஜை செய்து திட்டப்பணிகளை தொடங்கி வைத்து கட்டடத்தின் மாதிரி வடிவமைப்பை பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகரப் பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.