ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி, மே 25 திருச்சி மாநகரட்சி பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகரப் பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.