பஞ்சபூரில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி : மேயர் ஆய்வு
திருச்சி, செப்.20 திருச்சி மாநகராட்சி பஞ்சபூரில் அம்௹த் திட்டத்தின் கீழ் ரூ. 237.87 கோடிமதிப்பீட்டில் 100 எம். எல் . டி. நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருவதை மேயர் மு.அன்பழகன் , பொறியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் மண்டல தலைவர் துர்கா தேவி, செயற்பொறியாளர் கே .எஸ் . பாலசுப்பிரமணியன் உதவி பொறியாளர்வேல்முருகன் மற்றும் மாமன்ற உறுப்பினர் உட்பட பலர் உடன் இருந்தனர்.