18 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி… ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.

0 243
Stalin trichy visit

செல்லத்தமிழ் நகரில் ரூபாய் 18 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் இன்று தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் உள்ள செல்லத்தமிழ் நகர் 8 வது வார்டில் ரூபாய் 18 லட்சம் மதிப்பில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் வி.பி.டி. சோபனா இன்று தொடங்கி வைத்தார்.

செல்லத் தமிழ் நகர் 8வது வார்டில் கழிவுநீர் செல்ல போதுமான கால்வாய் இல்லாததால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் நிதியிலிருந்து ரூபாய் 18 லட்சம் மதிப்பில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் வி.பி.டி. சோபனா பூமி பூஜையுடன் பணிகளை தொடங்கி வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.