பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்…. போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

0 1,254
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலரசூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் (பெயர் குறிப்பிடப்படவில்லை ) 17 வயது உள்ள அவர் மால்வாய் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வு முடித்து உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலரசூர் விவசாயக் கூலி வேலை செய்து வரும் பிச்சைமணி மகன் முத்து (50) வயது மதியம் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை வாயை பொற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து அந்தப் பெண் நடந்த வன்கொடுமையை பெற்றோர்களிடம் தெரிவித்ததாகவும் உடனே பெற்றோர்கள் லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். விசாரணையில் முத்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய வந்தது தெரியவந்தது. லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாலதி முத்துவை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார். பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட கிருஷ்ணன் மகள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.