திருவெறும்பூரில் தொடரும் திருட்டு – பெல் இன்ஜினியர் வீட்டில் 23 பவுன் நகை கொள்ளை!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே குடியிருப்பு வளாகத்தில் உள்ள வெல் சீனியர் இன்ஜினியர் வீட்டில் 23 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் உள்ள செட்டாரை சேர்ந்தவர் பாலகுரு. இவரது மகன் அருண்குமார். இவர் பெல் நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 9ம் தேதி மானாமதுரையில் உள்ள உறவினர் இறந்ததால் குடும்பத்துடன் அங்கு சென்று உள்ளார். இதை தொடர்ந்து நேற்று இரவு வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 23 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வெல் காவல் நிலையத்தில் அருண்குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவெறும்பூர் பகுதியில் இதோடு கடந்த இரண்டு வாரங்களுக்குள் அடுத்தடுத்து பத்தாவது முறையாக திருடு போவது குறிப்பிடத்தக்கது