மின்சாரம் பாய்ந்து சினை பசு சாவு
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த இளவரசன்(26) என்பவருக்கு சொந்தமான 7 மாத சினை பசு அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது வயல் பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை பசு மிதிக்கவே அதன் மீது அதிக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டது. இதில் பசு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். சம்பவம் குறித்து பிச்சாண்டார்கோயில் மின்சாரத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பின்னர் அறுந்து கிடந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர்.