திருச்சியில் கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் மாயம்
திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார், இவரது மனைவி ஆனந்தி(22). இவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு மாமனார்- மாமியார் வீட்டை விட்டு துரத்தினர். அவர் சமயபுரம் மாரியம்மன் கோவில் தஞ்சம் அடைந்தார். பின்னர் கண்டோன்மெண்ட் போலீசார் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் ஆனந்தி மாயமாகிவிட்டார். இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் ஆனந்தியை தேடி வருகின்றனர்.
உறையூர் மேற்கு அச்செடிகார பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகள் விஷ்ணு பிரியா (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். விஷ்ணு பிரியா தனது தாயாரிடம் அருகில் உள்ள மளிகை கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து உறையூர் போலீசார் மாயமான விஷ்ணு பிரியாவை தேடி வருகின்றனர்.
இதேபோல் திருச்சி கல்லூர் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மகள் ஜீவிதா(20). இவர் திருச்சி பெரியகடை வீதி பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவர் தலை, வயிறுவலிப்ப தாக சொல்லி வீடுதிரும்பியுள்ளார். பின்னர் விசாரித்ததில் அவர் வீட்டுக்கு செல்ல வில்லை. எங்கு சென்றார் என்பது தெரியவில்லை இது கோட்டை போலீசில் புகார் செய்தார். அதில் மாயமான ஜீவிதாவை தேடி வருகின்றனர்.