சந்தன காப்பு அலங்காரத்தில் மதுரை காளியம்மன்

0 82

திருச்சி, மார்ச் 21  திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து நடைபெற்ற மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு யாக வேள்வி வேதபாராயணம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை மதுரை காளியம்மன் திருமேனியில் ஊற்றி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரத்தில் மதுரை காளியம்மன் அழகுடன் காட்சியளித்தார். அப்போது மழை வேண்டியும் வெப்ப நோய்களால் பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்கவும் மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும், விவசாயம் செழிக்கவும், தொழில் வளம் மேம்படவும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மண்டல பூஜை நிறைவு நாள் விழாவில் அறங்காவலர் குழு தலைவர் விஜய் ஆனந்த்,செயல் அலுவலர் விஜய் ,அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.