காட்டுப்பன்றி தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த சி.பி.எம்.கட்சி நிர்வாகி உயிரிழப்பு
திருவெறும்பூர் ஆக 14
காட்டுப்பன்றி தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாக சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருச்சி திருவானைக்கோவில் உள்ள கல்லணை சாலையில் நடுகரை, கிளிக்கூடு, கவுத்தரசநல்லூர், உத்தமர்சீலி,பனையபுரம், திருவளர்சோலை, பொண்ணுரங்கபுரம் உள்ளிட்ட பகுதிகள் ஆகும். இந்த பகுதிகளில் பிரதான தொழிலாளாக விவசாயமே உள்ளது. விவசாயத்தை நம்பி அப்பகுதி மக்களும் வாழ்வை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காட்டு பன்றிகள் இந்த கல்லணை நடுகரை பகுதியில் ஊர்களில் பயிர் செய்யப்படும் நடவு, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பெரிய அளவில் சேதப் படுத்துகிறது. இதனால் விவசாயிகள் பெரும் சேதத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 11 ம் தேதி கவுத்தரசநல்லூர் பகுதியில் கொய்யா தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி அங்கு இருந்த விவசாயி சகாதேவன் (45)என்பவரை கடித்து குதறியதோடு தொடையின் பின்பக்கம் பன்றியின் கொம்பு குத்தியதில்பலத்த காயமடைந்த சகாதேவன் திருச்சியில் உள்ளவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோல் அன்று மாலை உத்தமர்சீலியை சேர்ந்த கணபதி (70) இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட விவசாய அணி நிர்வாகி இவர் தனது வாழைத்தோட்டத்திற்கு சென்ற பொழுது அங்கு வந்த காட்டு பன்றி கணபதியை பல இடங்களில் கண்டித்து துன்புறுத்தியது. இதில் கணபதி பலத்த காயமடைந்தநிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் சிகிச்சைக்கு பலன் இல்லாமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நம்பர் ஒன் டோல் கேட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் கிருத்திகா திருச்சி வன சரகர் சுப்பிரமணியம் மற்றும் வனத்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை பார்த்ததோடு சம்பவ இடத்தையும் ஆய்வு செய்தனர் மேலும் இரண்டு குழுக்களை நியமித்து காட்டுப்பன்றிகளை பிடிப்பதற்காக கூண்டு மற்றும் வலைகளை வைத்துள்ளனர்.