நூலகர் தினவிழாவில் நூலகர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு

0 150
Stalin trichy visit

திருச்சி, ஆக.14  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பாக நூலகர் தின விழா கொண்டாடப்பட்டது.
கிளை நூலகம் முழுநேரகிளை நூலகம் 2024- 25 ஆம் ஆண்டில் அதிக உறுப்பினர்களை சேர்த்த நூலகர்களுக்கு அதேபோன்று 2024- 25 ஆம் ஆண்டு அதிக புரவலர்களை இணைத்த நூலகர்களுக்கு மற்றும் நன்கொடை வசூல் புதுப்பிக்கப்பட்ட சந்தா வசூல் செய்த நூலகர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மு. மதிவாணன், வாசகர் வட்ட தலைவர் கல்வி உளவியலாளர் அல்லிராணிபாலாஜி, மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி.  ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாகமாவட்ட நூலக அலுவலர் இரா‌. சரவணா குமார் . வரவேற்புரையாற்றினார். நிறைவாக முதல் நிலை நூலகர்  தனலட்சுமி நன்றி கூறினார். இதில்  மாவட்ட மைய நூலகம் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த முழு நேர நூலகர்கள் மற்றும் கிளை நூலகத்தின் நூலகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.