இடி தாக்கியதில் வீட்டு மின்சாதனப் பொருட்கள் சேதம் : நிவாரணம் வழங்க கோரிக்கை
திருவெறும்பூர் அக் 10 திருவெறும்பூர் அருகே நேற்று முன்தினம் இரவு இடி விழுந்ததில் உயர் மின் அழுத்தத்தில் நூற்றுக்கணக்கான டிவி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பல லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டு உள்ளதால் நிவாரணம் வேண்டி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ளது நவல்பட்டு ஊராட்சி இங்கு உள்ள பர்மா காலனி பகுதியில் நேற்று முன்தினம் பலத்த இடி இடித்தது சற்று நேரத்தில் பலத்த மழையும் பெய்ய தொடங்கியது. தொடர்ந்து அப்பகுதி முழு வதும் மின்சாரம் தானாக துண்டிக்கப்பட்டது. பர்மா காலனி பகுதியில் இருபத்தி ஒன்றாவது தெருவில் அருகே உள்ள ஆற்றங்கரை ஐடி பார்க் செல்லும் சாலையில் லட்சுமிநாராயணன் காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள தென்னை மரத்தில் இடி விழுந்துள்ளது பின்னர் தெரியவந்தது. இப்பகுதியில் இடி விழுந்து அதனால் உயர் மின் அழுத்தம் காரணமாக காம்ப்ளக்ஸில் உள்ள டிவி ஃபேன் மீட்டர் பாக்ஸ், குடிநீர் மோட்டார், அருகிலுள்ள 17,18,19,20, 21,22,ஆகிய தெருக்களில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான வீடுகளில் உள்ள டிவி வாஷிங் மெஷின் பேன் மீட்டர் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் பயன்படுத்த முடியாமல் சேதமடைந்துள்ளது இதன் மதிப்பு பல லட்சங்கள் ஆகும்.
இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் அதிமுக பிரமுகர் தனலட்சுமி கூறுகையில் இப்பகுதியில் ஏற்பட்ட திடீர் இடி விபத்தால் நூற்றுக்கணக்கான வீடுகளில் பல லட்சம் மதிப்புள்ள டிவிக்கள் பழுதாகி விட்டது இனி அதனை யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது மேலும் வாஷிங் மெஷின் பிரிட்ஜ் ஸ்விட்ச் பாக்ஸ் மீட்டர் பாக்ஸ் ஆகியவையும் பழுதடைந்து விட்டது இடி விழுந்த பகுதியில் அருகாமையில் உள்ள சுமார் 5 தெருக்களில் உள்ள வீடுகள் இதனால் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளோம் அரசு எங்களது பாதிப்பிற்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டுகிறோம் இவ்வாறு அவர் கூறினார்.