சிக்னலை மதிக்காததால் விபரீதம் – விபத்தில் சிக்கி தீப்பிடித்த வாகனம்
சிக்னலை கவனிக்காமல் அதிவேகமாக டூவீலரை ஓட்டி வந்ததால் ஏற்பட்ட விபரீதம் – கன்டோன்மெண்ட் அருகே பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது
திருச்சி தலைமை தபால் நிலையம் வழியாக இளைஞர் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஓட்டி ஒத்தக்கடை சிக்னல் அருகே வந்துள்ளார் – அப்போது சிக்னலின் மற்றொரு புறம் காய்கறி மூட்டைகளோடு ஒருவர் வந்துள்ளார். அங்கு சிக்னலை கவனிக்காமல் தலைமை தபால் நிலையம் வழியாக இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி வந்த இளைஞர் காய்கறி ஏற்றி வந்த நபரின் வாகனத்தின் மீது மோதியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக காய்கறி ஏற்றி வந்தவரின் இருசக்கர வாகனம் தீ பற்றி எரிந்தது –
உடனடியாக அங்கு அருகே உள்ள பெட்ரோல் பங்கிலிருந்து தீயணைப்பு கருவிகளை கொண்டு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீயை அணைத்தனர். வாகனம் மோதி கீழே விழுந்ததில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் – காலை நேரங்களில் இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.