சொத்தில் பங்குதர மறுக்கும் தம்பியை கண்டித்து அண்ணன் குடும்பத்தினர் போராட்டம்

0 584
Stalin trichy visit

மணப்பாறையில் பூர்வீக வீட்டில் பங்கு தரமறுத்த தம்பியை கண்டித்து அண்ணன் குடும்பத்தினர் தம்பி வீட்டின்‌ முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.

 

திருச்சி, அக். 20 திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த ஜெயராஜ் மகன்கள் ரமேஷ் மற்றும் சுரேஷ். ஜெயராஜ் இறப்பதற்கு முன் காளியம்மன் கோவில் அருகே உள்ள தனது பூர்வீக வீட்டை மகன்கள் இருவரது பெயரிலும் எழுதிக்கொடுத்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது முதல் மனைவி இறந்த பிறகு துர்கா தேவி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவர்களது பூர்வீக வீட்டில் ரமேஷின் தம்பி சுரேஷ் (வயது 47) அவரது மனைவி ஜெயசுதாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பூர்வீக வீட்டில் தனக்கும் சமபங்கு உண்டு எனவே தனக்கும் பிரித்து கொடுக்குமாறு ரமேஷ் தனது தம்பி சுரேஷிடம் கேட்டபோது நீ வேற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் உனக்கு பங்கு இல்லை என கூறி தனது மனைவியுடன் சேர்ந்து தகறாறு செய்ததாக கூறப்படுகிறது . இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது மனைவி மற்றும் மகளுடன் தங்களது பூர்வீக வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் கொடுத்தால் விசாரணை செய்வதாக கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.