ஜீவாநகர் ரயில்வே தண்டவாளம் பகுதியிலுள்ள முள்செடிகளை அகற்றிட பொதுமக்கள் கோரிக்கை
திருச்சி, பிப். 17 ஜீவாநகர் ரயில்வே தண்டவாளம் பகுதியிலுள்ள முள்செடிகளை அகற்றிட திருச்சி சிவா எம்.பிக்கு பொதுமக்கள் கோரிக்கை
திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள ஜீவா நகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரயில்வே தண்டாவளம் அருகே வசித்து வருகின்றனர். அங்கு வீட்டின் அருகே உள்ள தண்டவளம் காம்பவுண்ட் சுவர் அருகே முள் செடிகள் காடு போல் வளர்ந்து குப்பைகள் உள்ள அடர்ந்த காடு போல் உள்ளது. இப்பகுதி குடியிருப்புகளில் இரவு பகல் நேரங்களிலும் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ பூச்சிகள் வீட்டின் உள்ள வருகிறது. இதனால் தினமும் இரவு நேரங்களில் நிம்மதியான தூக்கத்தை இழந்து வருகிறோம்.
மேலும் கைக்குழந்தைகள் முதியவர்கள் தனியாக விட்டுச் செல்ல பயமாக உள்ளது.
சமீபத்தில் கூட நீண்ட நீளமுள்ள விஷப் பாம்பு ஒன்று வந்து விட்டது,இதை அறிந்த நாங்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து உடனே பாம்பை பிடித்துச் சென்றனர்.
ஆகவே ரயில்வே நிர்வாகம் எங்களின் உயிரை கருத்தில் கொண்டு உடனடியாக இப்பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளை சுத்தம் செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் திருச்சி எம் பி பல்வேறு பணிகள் | செய்து வருவதாக கேள்விப்படுகிறோம் அவருக்கும் எங்களுடைய கோரிக்கையை முன்வைக்கிறோம். இதற்கான நடவடிக்கையை ரயில்வே துறையிடம் தெரிவித்து இப்பகுதியில் உள்ள குப்பை மற்றும் அடர்ந்த காடு போல் உள்ள செடி கொடிகளை அகற்றி உதவிட வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.