தமிழக அரசை கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜூன் 26 கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து திருச்சியில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் என்று கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும், சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம்
மாணவர் மாவட்ட செயலாளர் கணேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் குமார், தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில்
நடைபெற்றது. வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் சந்தோஷ்குமார் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிக கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த மாநில தொழிற்சங்க பேரவை திருப்பதி, அவைத்தலைவர், ஜெயராமன், அர்ஜுனன், முருகேசன், ப்ரீத்தா விஜய் ஆனந்த், மில்டன் குமார்
மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.