பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

0 230
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 25  தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறை மற்றும் கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுசார்பில் பெருந்திரள் முறையீடு கோரிக்கை ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவி காயத்ரி தேவி தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் செயல் தலைவர் கோமதி,துணைத் தலைவர் விமலா தேவி ஆகியோர் விளக்கவுரையாற்றினர்,

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையாக,
காலியாக உள்ள துணை சுகாதார நிலையம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்மை துணை செவிலியர் பயிற்சி நிறைவு செய்தவர்களை பணி அமர்ந்த வேண்டும்,

மக்கள் தொகைக்கு ஏற்ப புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்களில் எம், எல்.எச்.பி.செவிலியர் களைபணியாற்றும் கருத்துரிமை கைவிட்டு கிராம சுகாதார செவிலியரை பணி நியமனம் செய்ய வேண்டும்,
செவிலியர்களுக்கு தரவுகளை உள்ளீடு செய்ய அழுத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
குடும்ப விவரங்களை பதிவேட்டில் கணக்கெடுத்து பதிவு செய்ய கால அவகாச வழங்காமல் நாள்தோறும் தரவுகளை உள்ளீடு செய்ய சொல்வதை நிறுத்த வேண்டும்,
களைப்பணிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சமுதாய சுகாதார செவிலியர்களுக்கு கணினி வழங்க வேண்டும்.
கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மாவட்ட சுகாதார அலுவலகங்களில் மேசை நாற்காலி குடிநீர் கழிவறை மின்விசிறி வசதியுடன் தனி அறை ஒதுக்கீடு செய்து தர வேண்டும்,

திறனாய்வின் போது ஒரு மயில் பேசுவது பண்பாட்டு வித்தைகள் பயன்படுத்துவதை
தடுத்து நிறுத்த வேண்டும்,
உள்ளீட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் செவிலியர்கள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.