இடுகாடு செல்ல பாதை கேட்டு ஆர்ப்பாட்டம்: வட்டாட்சியர் அமைதி பேச்சு வார்த்தை

0 323
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் அமைந்துள்ள வைரி செட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களில் ஒரு பிரிவினருக்கு இறந்தவர்களை சடல்த்தை மயானத்தில் தகனம் செய்வதற்கு எரிமேடை இல்லை என்றும் மேலும் இடுகாடுக்கு சடலத்தை கொண்டு சென்று நல்லடக்கம் செய்வதற்கு சரியான பாதை வசதிகள் இல்லாததால் இறந்தவர் உடலை தோளில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்படுவதால் பாதை வசதி கேட்டு
27/02/23 அன்று உப்பிலிபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது இதனை அறிந்த துறையூர் வட்டாட்சியர் புஷ்பராணி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இன்று (25/02/23) துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்தையில் ஈடுபட்டார் இதனை தொடர்ந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வட்டாட்சியர் புஷ்பராணி உறுதி அளித்ததினை தொடர்ந்து ஆர்ப்பாட்ட காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடப்படுவதாக கூறினார் நிகழ்ச்சியில் உப்பிலியபுரம் காவலுதவி ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் கொப்பம்பட்டி மண்டல துணை வட்டாட்சியர்
ரவி, அன்பழகன், அருண்குமார் மற்றும்
சமூக ஆர்வலர் மாஸ் மகேந்திரன்,
மனோகரன்
தமிழ்நாடு தங்க மாநில இளைஞரணி இணை செயலாளர் சங்கர் பெரியசாமி தாமோதரன் உள்பட கிராம மக்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.