அனுமதியின்றி மணல் அள்ளிய இருவர் கைது

0 364
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பூக்கொல்லையில் அனுமதியின்றி அள்ளிய இருவர் கைது. பொக்லின், லாரி, மணல் பறிமுதல்.

திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்ட நிலையில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக புகார் வந்ததால் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும் அதிகாரிகளை கொண்டு ஆலோசனை நடத்தினர். இதில் சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் நம்பர் 1 டோல்கேட் அருகே பூக்கொல்லை பகுதியில் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்துவதாக கொள்ளிடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு சென்ற கொள்ளிடம் போலீசார் அங்கு மணல் அள்ள பயன்படுத்திய பதிவு இல்லாத ஜேசிபி மற்றும் லாரி நின்று கொண்டிருந்தது. போலீசார் விசாரணையில் ஜேசிபி இநந்திரம் மூலம் லாரியில் அனுமதியின்றி மணல் கடத்துவது தெரியவந்தது. மேலும்
அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் சேலம் மாவட்டம் தர்மபுரி மெயின் ரோடு மேட்டுப்பாளையம் கம்மம்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் 40 வயதான முருகன் மற்றும் சமயபுரம் பகுதியை சேர்ந்த 37 வயதான பாலமுருகன் என தெரிய வந்தது.

பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில்
அடைத்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய லாரி மற்றும் பொக்கலினையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.