சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1.27 கோடி பக்தர்கள் காணிக்கை
திருச்சி, ஆக.1 சமயபுரம் மாரியம்மன் மற்றும் உப கோவில்களில் உண்டியல்களில் ரூ 1 கோடியே 27 லட்சத்து 31 ஆயிரத்து 398 ரூபாய் ரொக்கம், 1 கிலோ 535 கிராம் தங்கம், 4 கிலோ 405 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கை.
சக்தி தலங்களில் முதன்மையானது, பிரசித்தி பெற்ற தளமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடனை காணிக்கை உண்டியல்களில் செலுத்தி விட்டு செல்வார்கள்.
அப்படி கடந்த 14 நாட்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் சமூக ஆர்வலர்கள் கோவில் மண்டபத்தில் எண்ணப்பட்டது.
இதில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் காணிக்கையாக ரூ. 1 கோடியே 21 லட்சத்து 26 ஆயிரத்து 581 ரூபாய் ரொக்கமும், 1 கிலோ 535 கிராம் தங்கமும், 4 கிலோ 405 கிராம் வெள்ளியும், உப கோவில்களாக விளங்கும் இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் உண்டியல்கள் மூலம் ரூ.5 லட்சத்து 83 ஆயிரத்து 665 ரொக்கமும், உஜ்ஜயினி ஓம்காளிஅம்மன் கோவில் உண்டியல்கள் மூலம் ரூ. 15 ஆயிரத்து 743 ரொக்கமும், அருள்மிகு போஜீஸ்வரர் கோவிலில் 5 ஆயிரத்து 409 ரொக்கமும் காணிக்கையாக பெறப்பட்டது என கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.