சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ.85 லட்சம் பக்தர்கள் காணிக்கை

0 351
Stalin trichy visit

திருச்சி  சமயபுரம் மாரியம்மன் கோவிலில்   பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் முதல் முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

இதில் காணிக்கையாக ரூ.85 லட்சத்து 189 ரொக்கமும், 2 கிலோ 553 கிராம் தங்கமும், 2 கிலோ 837 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.