வேப்பிலை மாரியம்மன் கோவிலில் அக்கினி சட்டி எடுத்து, அலகு குத்தியும் நேர்த்திக் செலுத்திய பக்தர்கள்

0 416
Stalin trichy visit

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பக்தி பரவசத்துடன் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
பொங்கலிட்டு, அக்கினி சட்டி எடுத்து, அலகு குத்தியும் வழிபாடு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் மிகவும் புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் திருவிழா ஏப்ரல் 23 ம்தேதி பூச்சொரிதழ் விழாவுடன் துவங்கி தொடர்ந்து 30 ம் தேதி காப்பு கட்டுதல் விழாவும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குட விழா நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று காலை தாரை தப்பட்டை முழங்க பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டனர். இதே போல் பலரும் தங்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் இட்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் கோவிலுக்கு அழைத்து வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.