ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்
திருச்சி, ஜன.4 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் 124 ம் ஆண்டு திருவிழாவில் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு “தனலட்சுமி அலங்காரம் ” நடைப்பெற்றது.ஒம் சக்தி பராசக்தி பக்தி முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மண்ணச்சநல்லூர் கனை வீதியில் உள்ள வணிக வைசியர் சங்கம்* சார்பில் 124 ம் ஆண்டு திருவிழா டிச.26ம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று ரூ 10, ரூ 20, ரூ 50, ரூ 100, ரூ 200, ௹ 500 மற்றும் நாணயங்களால் தோரணம் முதல் கொண்டு ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் நேர்த்தியாகவும், அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
தொடர்ந்து அலங்கார மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது.
தனலட்சுமி அலங்காரம் தரிசித்தால் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது
இந்நிகழ்வில் பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு
பக்தி பரவசத்துடன் பகவதி அம்மனை தரிசனம் செய்தனர்.