புள்ளம்பாடியில் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் சங்க மாவட்ட மாநாடு

0 346
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3 வது மாவட்ட மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது,

அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 100 நாள் வேலையை முழு சம்பளத்துடன் தொடர்ந்து வழங்க வேண்டும்,

கடும் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5000 மும், ஊனமுற்றோர் அனைவருக்கும் ரூ. 3000மும் வழங்க வேண்டும்,

மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்று வழங்க வேண்டும்,

50 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் பொருத்திய பெட்ரோல் வண்டி வழங்க வேண்டும்,
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இலவச வீட்டு மனை வழங்கி வீடு முழுவதும் இலவசமாக கட்டி கொடுக்க வேண்டும்,
புள்ளம்பாடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

இதில் மாநில பொதுச் செயலாளர் ஜான்சிராணி துவக்க உரையாற்றினார். அகில இந்திய தலைவர் நம்புராஜன் சிறப்புரை ஆற்றினார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தனர் இதில் தலைவராக ரவி, செயலாளராக ரஜினிகாந்த், பொருளாளராக சித்ரா ஆகியோர் தேர்ந்தெடுத்தனர். இந்த மாநாட்டிற்கு திருச்சி மாவட்டத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.