பழங்கால ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு

0 414
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு தோண்டும் போது பழங்கால ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

நன்னிமங்கலம் கிராமத்தில்  உள்ள அக்ரஹாரம் தெருவில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நேற்று புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதில் சுமார் 20 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அப்போது ஆழ்துளை கிணற்றில் மண் பகுதியில் ஏதோ பொருள் சிக்குவதுபோன்று தொழிலாளர்கள் உணர்ந்தனர். இதையடுத்து அந்த பொருளை வெளியே எடுத்து பார்த்தபோது, அரை அடி உயரம் கொண்ட ஐம்பொன்னாலான அம்மன் சிலை என்பது தெரியவந்தது. பழங்காலத்தை சேர்ந்த அந்த சிலையின் கைகள் சேதமடைந்திருந்தன. இந்நிலையில் சிலை கண்டெடுக்கப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று அந்த சிலையை ஆச்சரியத்துடன் பார்த்து வழிபட்டனர். மேலும் இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர்கள் குணசேகரன், வினோத் மற்றும் போலீசார் அங்கு சென்று சிலையை மீட்டு தாசில்தார் அலுவலகம் கொண்டு சென்றனர். அந்த சிலை லால்குடி கருவூலத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.