மண்ணச்சநல்லூர் அருகே பழங்கால சிலைகள் கண்டெடுப்பு

0 224
Stalin trichy visit

திருச்சி, பிப். 3  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தண்ணீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது 3 பழங்கால சிலைகள்,பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி, ஆர்.ஆர்.எஸ். சாலை அசோக் நகரை சேர்ந்த சுப்ரமணியனின் மகன் சுரேஷ் இவர் தனது வீட்டிற்கு அருகில் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக நேற்று பணியாளர்கள் மூலம் பள்ளம் தோண்டி னார். சுமார் 6 அடியில் கடப்பாரையால் பள்ளம் தோண்டியபோது டங் என்ற சத்தம் கேட்டது.

இதைத்தொடர்ந்து, பணி யாளர்கள் கையால் மண்ணை தோண்டி பார்த்தபோது அங்கே 2 அடி உயர பெருமாள் சிலை மற்றும் 1 அடி உள்ள 2 சாமி சிலைகள், 1 குடுவை, 2 சிறிய முக்காலிகள் ஆகியவை இருந்தது. இதைக் கண்ட பணியாளர்கள் சுரேசுக்கு தகவல் கொடுத்தனர். அவர் இது பற்றி வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழும் தலைவர் வி. எஸ். பி. இளங்கோவன் மண்ணச்சநல்லூர் தாசில்தார் பழனிவேல், துணை தாசில்தார் மூர்த்தி, மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரகுராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சிலைகளை பார்வையிட்டனர். அந்த பழங்கால சிலைகள் எந்த வகையிலான உலோகங்களால் செய்யப்பட்டவை என்பதும், எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தால் தான் தெரியவரும்.

இதனைத் தொடர்ந்து சாமி சிலைகள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றி மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டனர்.  சிலைகள் மண்ணச்சநல்லூர் கருவூலத்தில்  பத்திரமாக ஒப்படைக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.