பள்ளி மாணவிகளுக்கு செல்வமகள் சேமிப்புத்திட்ட வங்கி புத்தகம் வழங்கல்
திருச்சி தென்னூர் நடுநிலைப் பள்ளியில் செல்வமகள் சேமிப்பு திட்ட வங்கி புத்தகம் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், நூலகர் புகழேந்தி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சாயிதா பானு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செல்வமகள் சேமிப்பு திட்ட வங்கி புத்தகத்தை வழங்கி பள்ளி தலைமை ஆசிரியர் விமலா பேசுகையில்,சுகன்ய சம்ரிதி திட்டம் 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும்.இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.
திட்டத்தின்படி 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். அப்பகையில் இன்னர் வீல் லேடிஸ் கிளப் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தலைவி கவிதா நாகராஜன் உதவியில் பத்தொன்பது மாணவிகளுக்கு செல்வமகள் திட்டத்தில் கணக்கு துவங்கப்பட்டுள்ளது.முதிர்வு தொகையை 21ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம் என்றார்.